சிறுமியர் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

சிறுமியர் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
338ce4ed-76e8-4aaf-bea9-38b9dced27eb
படம்: - தமிழ் முரசு

வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு அவர் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி இப்போது 21 வயதாகும் அந்த இளையர், ஒரு நிலையத்தில் அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட வாழ்க்கைமுறைக்கு உட்படுத்தப்படுவார். மனநல ஆலோசனையும் பயிற்சியில் இடம்பெறும்.

குற்றவாளியான இளையரின் பெயரை வெளியிட அனுமதியில்லை. தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை அடையாதவருடன் உடலுறவு வைத்துக்கொண்டதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தங்களின் கருவைக் கலைத்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்