வட்டாரத்தில் அமைதியை எதிர்பார்க்கும் பெய்ஜிங், ஜகார்த்தா

வட்டாரத்தில் அமைதியை எதிர்பார்க்கும் பெய்ஜிங், ஜகார்த்தா

1 mins read
18273d45-827c-4da3-ad8a-7145e004b1a3
கடந்த ஆண்டு மட்டும் 7.4 பில்லியன் டாலர் சீன முதலீட்டை இந்தோனீசியா ஈர்த்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: சீனாவும் இந்தோனீசியாவும் அதன் பொருளியல் உறவை வலுப்படுத்தவும் வட்டாரத்தில் அமைதி நிலைத்தன்மையை தொடரவும் விருப்பம் தெரிவித்துள்ளன.

வியாழக்கிழமை (ஏப்ரல் 18) ஜகார்த்தாவில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ அந்த கருத்தைத் தெரிவித்தார். சந்திப்பு நிகழ்ச்சியில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடியும் இருந்தார்.

காஸாவில் நடக்கும் போர் குறித்தும் வாங் யி கவலை தெரிவித்தார். அமெரிக்கா ஐநாவின் காஸா போர்நிறுத்த உடன்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சீனா அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி காஸாவில் நடத்து வரும் போருக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ கேட்டுக்கொண்டார்.

அண்மை ஆண்டுகளாக சீனாவின் முதலீடு இந்தோனீசியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 7.4 பில்லியன் டாலர் சீன முதலீட்டை இந்தோனீசியா ஈர்த்துள்ளதாக ரெட்னோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்