பிடாடாரியை பார்ட்லியுடன் இணைக்கும் பணிகள் தொடக்கம்

பிடாடாரி நகரத்தின் பிரதான சாலையை பார்ட்லி சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

பார்ட்லி சாலை, பிடாடாரி பார்க் டிரைவ் சந்திப்பில் வேலை நடைபெறும் அந்த 1.6 கிலோ மீட்டர் இரு தட சாலை, பிடாடாரின் “முக்கிய போக்குவரத்து முதுகெலும்பு” என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) வர்ணித்துள்ளது.

முன்னர் 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முடிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த இந்தச் சாலைப் பணிகள் தற்போது, 2024ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அப்பகுதியில் தொழில்நுட்ப சிக்கல்” காரணமாக இரு சாலை இணைப்பின் காலக்கெடுவை மறுஆய்வு செய்வதாக 2023 பிப்ரவரியில் வீவக கூறியது.

“புதிய குறுக்குச் சந்தின் வடிவமைப்பை மறுஆய்வு செய்து சரிசெய்ய” ஆலோசகர் ஒருவருடன் பணியாற்றி வருவதாக ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வீவக கூறியது.

2023 நான்காம் காலாண்டில் திருத்தப்பட்ட வடிவமைப்பு நிறைவடைந்ததாகவும், 2024 முதல் காலாண்டில் வேலை பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

உயரத்தைக் குறைக்க பார்ட்லி சாலையை நோக்கிச் செல்லும் கிட்டத்தட்ட 20 மீட்டர் பிடாடாரி பார்க் டிரைவ் அகழப்பட்டதாக கடந்த வாரம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.

அதிகம் பயன்படுத்தப்படும் ஆறு தட இரு வழிச் சாலையான பார்ட்லி சாலை இன்னும் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் முன்னர் கணிக்கப்பட்ட 0.9 மீட்டருக்கு பதிலாக 0.7 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் என்று வீவக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி “2024ன் இறுதியில் அல்லது 2025ன் தொடக்கத்தில்” அந்தச் சந்திப்பு நிறைவடையும் என்று வீவக எதிர்பார்க்கிறது.

பெரும்பாலான உள்கட்டமைப்புப் பணிகளைப் போலவே, இந்த திட்டமும் கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலால் தாமதமானது.

2023 பிப்ரவரியில், பிடாடாரி பார்க் டிரைவ் 1 மீட்டருக்கும் அதிக உயரமாக இருப்பதால் பார்ட்லி ரோடு உயர்த்தப்பட வேண்டும் என்று வீவக கூறியது.

தற்போதுள்ள உயரத்தில் பார்ட்லி சாலையுடன் பிடாடாரி பார்க் டிரைவை இணைப்பது செங்குத்தான சரிவை பார்ட்லி வோக்குக்கு உருவாக்கும். பார்ட்லி வோக், பிடாடாரி பார்க் டிரைவை மவுன்ட் வெர்னன் சாலையுடன் இணைக்கும் சிறிய சாலை ஆகும்.

அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, புதிய சந்திப்பு வழங்கும் கூடுதல் வசதிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது குறித்து அப்பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பார்ட்லி சாலை தவிர்த்து, பிடாடாரி பார்க் டிரைவுக்கு நேர் எதிராக இருக்கும் சிராங்கூன் அவென்யூ 1 சாலையும் உயர்த்தப்பட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!