ஆண்டின் அதிக வெப்பநிலை 36.4 செல்சியஸ்; மே முதல் 2 வாரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
5395033d-2b05-426c-b2ed-6e7da299fa67
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழைப் பொழிவை மே மாத முதல் இரண்டு வாரங்களில் எதிர்பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏப்ரல் 26ஆம் தேதி பாய லேபார் பகுதியில் வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியசாக பதிவானது.

அதுவே இவ்வாண்டு சிங்கப்பூரில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலை என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதைத் தெரிவித்த நிலையம், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் காலை பின்னேரத்திலும் மதியமும் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

மேலும், சில நாள்களில் காலை நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்று நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அன்றாட வெப்பநிலை 33க்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில நாள்களில் இது 35 டிகிரி செல்சியசை தாண்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்