புளோக்குகளில் ஃபேர்பிரைசின் மே தினக் கொண்டாட்டம்

மே தினக் கொண்டாட்டங்களின் நிறைவாக, வேலைபார்க்கும் சிங்கப்பூரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புளோக்குகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (மே 4), சிராங்கூன் நார்த், கிம் மோ ஆகிய வட்டார புளோக்குகளில் இத்தகைய இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியிருப்பாளர்களுக்காக குடும்பத்தோடு கலந்துகொள்ளக்கூடிய விளையாட்டு அங்கங்களோடு, பல்வேறு உணவுவகைகளைச் சுவைத்துப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் 800க்கும் மேற்பட்ட கோப்பைகளில் காபி, தேநீர் ஆகிய பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

வசதிகுறைந்த குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

‘யூனிட்டி’ மருந்தகத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட சிறப்பு முகப்புகளில் குடியிருப்பாளர்கள் இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் கொண்டாட்ட உணர்வைப் பரப்புவதும் குடியிருப்பாளர்களுக்கு இடையே சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி, உதவி தேவைப்படுவோர்க்கு உதவுவதும் இந்த நிகழ்ச்சிகளின் நோக்கங்கள்.

சிராங்கூன் நார்த்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில், அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி இங் லிங் லிங், என் டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு கிறிஸ்டஃபர் டி சூசா, கிம் மோவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இரு நிகழ்ச்சிகளிலும் ‘ஃபேர்பிரைஸ் ஆன் வீல்ஸ்’ லாரிகள் மூலம் சலுகை விலையில் பொருள்கள் விற்கப்பட்டன. என்டியுசி தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 50 விழுக்காட்டு விலைக்கழிவில் வழங்கப்பட்ட கனோலா சமையல் எண்ணெய்யும் அவற்றில் அடங்கும்.

ஏப்ரல் மாத இறுதியில், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்கு 4.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான விலைக்கழிவு வழங்குவது குறித்து ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்திருந்தது.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து, வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படியாகும் நிலையில் வைத்திருப்பது இதன் நோக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!