‘சிங்கப்பூர், சோலில் உள்ள டல்விச் கல்லூரியை விற்கப்போவதில்லை’

1 mins read
8d44dc00-d4c0-4295-b23f-fc5f12974ac5
டல்விச் கல்லூரி பிரிட்டனில் நிறுவப்பட்டு 400 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலும் தென்கொரியத் தலைநகர் சோலிலும் இருக்கும் டல்விச் காலேஜ் இன்டர்நேஷனலுக்குச் சொந்தான பள்ளிகளை விற்கப்போவதில்லை என்று அவற்றின் உரிமையாளரான ‘எடுகேஷன் இன் மோஷன்’ கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனிடம் டல்விச் காலேஜ் இன்டர்நேஷனலின் ஆசியச் சொத்துகளில் சிலவற்றை ஏறத்தாழ 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$816 மில்லியன்) ‘எடுகேஷன் இன் மோஷன்’ கல்விக் குழுமம் விற்க இருப்பதாக வெளியான தகவல்களை அது மறுத்தது.

சிங்கப்பூரில் உள்ள டல்விச் கல்லூரியில் கிட்டத்தட்ட 3,000 மாணவர்கள் பயில்கின்றனர்.

சோலில் உள்ள டல்விச் கல்லூரியில் ஏறத்தாழ 650 மாணவர்கள் உள்ளனர்.

மாணவர்கள் இரண்டு வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்