தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் லீ எப்போதும் சிங்கப்பூருக்கு நன்மையளிக்கும் செயல்களில் கவனம் செலுத்துபவர்: மூத்த அமைச்சர் டியோ

2 mins read
eea722fa-7766-4183-9e4f-4694204fcc1e
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் பிரதமர் லீ சியன் லூங்கும் சிங்கப்பூர் அமைச்சரவையில் 30 ஆண்டுகளாக ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

பிரதமர் லீ சியன் லூங், எப்போதும் ஊக்கத்துடன் செயல்படுபவர் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

மூத்த அமைச்சர் டியோவும் பிரதமர் லீயும் பல ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரிந்தவர்கள். திரு கோ சோக் தோங் பிரதமராக இருந்தகாலம்தொட்டு சிங்கப்பூரின் அமைச்சரவையில் 30 ஆண்டுகளாக இணைந்து பணிபுரிபவர்கள்.

கடந்த 40 ஆண்டுகளுக்குமேலாகத் திரு லீயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைத் திரு டியோ, நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

இருவருமே 1970களில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்கள். பிரதமர் லீ மூத்த அமைச்சர் டியோவைவிட ஈராண்டுகள் மூத்தவர்.

ஆயுதப்படையில் திரு லீ பணியாற்றியது குறித்து நினைவுகூர்ந்த திரு டியோ, பிரதமரின் தலைமைத்துவம் குறித்தும் கருத்துரைத்தார்.

அமைச்சர்கள் அவரவர் பணியைச் செய்ய சுதந்திரம் தரும் தலைவர் பிரதமர் லீ என்று குறிப்பிட்ட மூத்த அமைச்சர், தாம் தலைமை வகித்த அமைச்சுகளில் முடிவெடுப்பதற்காகப் பிரதமர் லீயை அணுகிய தருணங்கள் மிக அரிது என்றார்.

2013ஆம் ஆண்டு நடந்த லிட்டில் இந்தியா கலவரத்துக்குப்பின் பிரதமர் லீ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலில், துணைப் பிரதமராக இருந்த தம்மை அந்த நிலவரத்தைக் கையாள அனுமதித்ததைத் திரு டியோ எடுத்துரைத்தார்.

“அவ்வப்போது அவருக்கு நிலைமையை எடுத்துக்கூறுவேன். இருப்பினும் அச்சூழலைக் கையாளும் சுதந்திரத்தை அவர் எனக்கு அளித்தார். அந்த வகையில் பார்த்தால், தமது குழுவினர் பொறுப்புகளை நிறைவேற்ற வாய்ப்பளிப்பதிலும் அவர்கள் பணி குறித்து அவ்வப்போது அறிந்துகொள்வதிலும் திரு லீ சிறப்பாகச் செயல்படுபவர்,” என்று அவர் கூறினார்.

எப்போதும், நாட்டுக்கு நன்மையளிப்பதைச் செய்வதில் பிரதமர் லீ தெளிவாகச் செயல்பட்டதாக மூத்த அமைச்சர் டியோ கூறினார். வழக்கமான காலகட்டத்திலும் கொவிட்-19 கிருமிப் பரவலின்போதும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் தமது பொறுப்பு என்பதைத் தெளிவாக உணர்ந்து திரு லீ அவற்றில் கவனம் செலுத்தியதை அவர் சுட்டினார்.

மேலும், திரு லீ மற்றவர் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பவர் என்று கூறிய திரு டியோ, விவகாரங்களின் தொடர்பில் நுணுக்கமான தகவல்களையும் தெரிந்துகொள்வதில் முனைபவர் என்றார்.

குறிப்புச் சொற்கள்