தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காத்தோங்கில் தரை வீட்டில் தீ விபத்து

1 mins read
f3b39441-9eb7-480a-8a8e-7539eafb9b53
தீயணைப்பு வீரர்கள் ஏழு குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

காத்தோங் கடைத்தொகுதி அருகே இருக்கும் தரை வீட்டில் திங்கட்கிழமை (மே 13) தீவிபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

எண் 29, மக்லிஸ்டன் சாலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தனக்கு திங்கட்கிழமை காலை 11.35 மணியளவில் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிற்பகல் 2.20 மணியளவில் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

தீயணைப்பு வீரர்கள் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துப் பாதிக்கப்பட்ட வீட்டின் முன்புறம், பின்புறம், அவ்வீட்டிற்கு அருகே அமைந்துள்ள மூன்று வீடுகளுக்குப் பரவியிருந்த தீயை அணைத்தனர் எனப் படை தெரிவித்தது.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் அதன் அண்டை வீடுகளில் வசித்தவர்கள், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீச்சம்பவம் ஏற்பட்ட இடத்திலிருந்து வெளியேறினர் எனப் படை குறிப்பிட்டது.

தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட வீடும் அதற்கு அருகே இருந்த இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்