சிதைக்கப்பட்ட கடப்பிதழ்: பிலிப்பீன்ஸ் விமான நிலையத்தில் சிங்கப்பூரர் கைது

சிதைக்கப்பட்ட கடப்பிதழ்: பிலிப்பீன்ஸ் விமான நிலையத்தில் சிங்கப்பூரர் கைது

1 mins read
283a9c19-59ce-4ff1-90e7-2af2e2c88ba3
பிலிப்பீன்சின் கிளார்க் அனைத்துலக விமான நிலையத்தில் 45 வயது முகம்மது ஃபைசால் அகமது கமால் கைது செய்யப்பட்டார். - படம்: கிளார்க் அனைத்துலக விமான நிலையம்/ஃபேஸ்புக்

சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் பிலிப்பீன்சின் கிளார்க் அனைத்துலக விமான நிலையத்தில் மே 9ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

சிதைக்கப்பட்ட கடப்பிதழை 45 வயது முகம்மது ஃபைசால் அகமது கமால் பயன்படுத்தியதாக பிலிப்பீன்ஸ் குடிநுழைவு ஆணையம் மே 15ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

“பிலிப்பீன்சுக்கு முன்பு பயணம் மேற்கொண்டது அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க அகமது கமால் தமது கடப்பிதழில் இருந்த சில பக்கங்களைக் கிழித்தெறிந்தது தெரியவந்தது,” என்று ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலை செய்ய பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அகமது கமால் ஏப்ரல் 28ஆம் தேதியன்று தம்முடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் அவரைக் கண்காணித்து வந்தனர்.

சிங்கப்பூரில் அப்பெண் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

அகமது கமால் கைது செய்யப்பட்ட அதே நாளன்று சீன நாட்டவரான 33 வயது சுயே காங் மணிலா விமான நிலையத்தில் பிடிபட்டார்.

அவர் இணைய மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

அகமது கமாலும் சுயே காங்கும் மணிலாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்