தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பல வாகன விபத்து

1 mins read
c56dd1a0-36fa-47c0-9159-6c555c6455e4
உட்லண்ட்சை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார், லாரி, பேருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விபத்து குறித்து மே 20ஆம் தேதி காலை 8.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. - படங்கள்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடெண்ட்/ஃபேஸ்புக்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மே 20ஆம் தேதி நடந்த விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உட்லண்ட்சை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார், லாரி, பேருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விபத்து குறித்து மே 20ஆம் தேதி காலை 8.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

மோட்டார் சைக்கிளோட்டிகளான ஆடவர் இருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் முறையே 24, 33 வயது நிரம்பியவர்கள்.

காரில் மோதாமல் தப்புவதற்காக, ஆடவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்ததாகவும் ஆனால் அப்போது கடந்து சென்ற பேருந்தின் பக்கவாட்டில் அவர் மோதிக்கொண்டதாகவும் ஷின் மின் நாளேடு தெரிவித்தது.

அந்த நீல நிறப் பேருந்து மலேசியாவில் பதிவு செய்யப்பட்டது.

சாலை விபத்துகளைப் பதிவிடும் ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்விபத்து தொடர்பான காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

அதில், ஆடவர் ஒருவர் சாலையில் படுத்திருப்பதையும் மற்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் அவரைச் சூழ்ந்திருப்பதையும் காண முடிகிறது.

தலைக்கவசம் அணிந்த மற்றோர் ஆடவர் பேருந்துக்கு அருகில் சாலையில் படுத்திருப்பதையும் காண முடிகிறது.

கண்ணாடி சன்னல் சிதறி, பக்கவாட்டில் பெரிய ஓட்டையுடன் பேருந்து மோசமாகச் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்