பசுமை முறி மூலம் $2.5 பி. திரட்ட இலக்கு

பசுமை முறி மூலம் $2.5 பி. திரட்ட இலக்கு

1 mins read
4fddedec-8305-4396-b025-bca237036176
30 ஆண்டுப் பசுமை முறித் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம், 30 ஆண்டுப் பசுமை முறித் திட்டத்தின் மூலம் 2.5 பில்லியன் வெள்ளி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

பசுமை சிங்கப்பூர் அரசாங்கப் பங்குப் பத்திரங்கள் (உள்கட்டமைப்பு) என்பது அந்த முறியின் பெயர்.

அதன் முதற்கட்ட வழிகாட்டி விலை ஒரு காசுக்குக் கிட்டத்தட்ட 3.6 விழுக்காடாக இருக்கும் என்று ‘டெர்ம் ஷீட்’ எனப்படும் இந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகளைப் பட்டியலிடும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 21ஆம் தேதி விலை குறிப்பிடப்படும் அந்த முறியின் மூலம், $2.1 பில்லியன் முதல் $2.5 பில்லியன் வரை திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் $2.45 பில்லியன் மதிப்புள்ள முறிகளை நிறுவனங்களுக்கும் $50 மில்லியன் மதிப்புள்ள முறிகளைப் பொதுமக்களுக்கும் விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மின்னணு முறையில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சில்லறை முதலீட்டாளர்கள் மே 23ஆம் தேதி காலை 9 மணி முதல் 27ஆம் தேதி நண்பகல் வரை விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, சிங்கப்பூரின் பசுமை முதலீட்டுக் கட்டமைப்பின்கீழான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூர் முதல்முறையாக பசுமை முறியை வழங்கியது. அப்போது 50 ஆண்டுப் பசுமை முறியின் மூலம் $700 மில்லியன் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதி உள்கட்டமைப்பு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்