“பை நவ் பே லேட்டர்” என்ற இப்பொழுது வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை சிங்கப்பூரில் உள்ளது.
இது மின்னிலக்கப் பணப்பை, கடன்பற்று அட்டை, கடன் அட்டை என்ற கட்டணக் கழிவு அட்டை ஆகிய வாங்கும் பொருள்களுக்கு கட்டணம் செலுத்தும் சேவை சிங்கப்பூரில் தொடரும் என்று வேர்ல்ட்பே’ஸ் 2024 என்ற உலக அளவில் கட்டணம் செலுத்தும் முறை தொடர்பான அறிக்கை கூறுகிறது.
இது குறித்து கூறும் அந்த தொழில்நுட்ப கட்டண முறை நிறுவனம், மின்னிலக்க, நேரில் பொருள்களைப் பார்த்து வாங்கும் முறை உட்பட, பொருள்களை இப்பொழுது வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை மொத்த கட்டணம் செலுத்தும் முறையில் 2 விழுக்காடு பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது.
இதே நிலை 2023ஆம் ஆண்டும் இருந்ததாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, ஆப்பிள் பே, கூகல் வாலட், கிரேப்பே, ஷோப்பீபே போன்ற மின்னிலக்க கட்டணம் செலுத்தும் முறையின்கீழ், மின்னிலக்க, நேரில் பொருள்களைப் பார்த்து வாங்கும் முறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 2027ஆம் ஆண்டு மொத்த கட்டணம் செலுத்தும் முறையில் 45 விழுக்காடு அளவு பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் கூறிய வேர்ல்ட்பே மொத்த செலவினத்தில் மின்னிலக்க பணப்பை மூலம் கட்டணம் செலுத்தும் முறை 2023ஆம் ஆண்டில் $41 பில்லியன் அளவு இருந்தது. இது 2027ஆம் ஆண்டு $89 பில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2027ஆம் ஆண்டுவாக்கில் கடன்பற்று அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை 2023ஆம் ஆண்டு 39 விழுக்காடாக இருக்கும் நிலையிலிருந்து 2027ஆம் ஆண்டில் 29 விழுக்காடு என்ற அளவுக்கு குறையும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், டெபிட் கார்ட் என்ற கட்டணக் கழிவு அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையில் 2023ஆம் ஆண்டு இருந்த 18 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 2027ஆம் ஆண்டு 13 விழுக்காடு என்ற நிலைக்கு கீழிறங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜெனரேஷன் ஸி எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டோரும் யங் மில்லேனியல்ஸ் என்று வகைப்படுத்தப்படும் 25 வயதிலிருந்து 34 வயதுக்கு உட்பட்டோருமே ‘பிஎன்பிஎல்’ எனப்படும் இப்பொழுது வாங்கிவிட்டு பிற்பாடு பணம் கட்டும் முறையை அதிகம் பின்பற்றுவோர் என்று வோர்ல்ட்பே நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.