இரண்டு நிலப்பகுதிகளை விற்பனைக்கு விடும் நகர மறுசீரமைப்பு ஆணையம்

இரண்டு நிலப்பகுதிகளை விற்பனைக்கு விடும் நகர மறுசீரமைப்பு ஆணையம்

1 mins read
ed444325-bc82-4a46-ae48-99943b3fab8e
குடியிருப்பு வீடுகள் கட்ட இரண்டு நிலப்பகுதிகளை விற்பனைக்கு விட்டுள்ளது நகர மறுசீரமைப்பு ஆணையம். - படம்: கூகல் மேப்ஸ்

குடியிருப்பு வீடுகள் கட்ட 2024ஆம் ஆண்டின் முதற் பாதி ஆண்டு நில விற்பனைத் திட்டமாக இரண்டு நிலப்பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் விற்பனைக்கு விட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலின்கீழ் விற்பனைக்கு விடப்பட்டுள்ள அவ்விரு நிலப்பகுதிகளும் 99 ஆண்டுக்கால குத்தகையைக் கொண்டுள்ளன.

உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் என்பது தேவையைப் பொறுத்து இல்லாமல் விற்பனைக்கு விடப்படும் நிலப்பகுதி. மாறாக, ரிசர்வ் பட்டியலின்கீழ் வரும் நிலப்பகுதிகள் சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஒன்று அந்த நிலப்பகுதியை வாங்கும் நோக்கோடு ஏற்புடைய விலை ஒன்றை முன்வைக்கும்போது அரசாங்கம் ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கும்.

இதில் குவீன்ஸ்டவுன் பகுதியின் மார்கரெட் டிரைவில் உள்ள நிலப்பகுதி 9,522.3 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது என்றும் இங்கு 460 தனியார் வீடுகளைக் கட்டலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலப்பகுதி மொத்த தரை அளவாக 39,994 சதுர மீட்டரைக் கொண்டிருப்பதுடன் சிறார் பராமரிப்பு நிலையத்துக்காக 500 சதுர மீட்டர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது நிலப்பகுதி மீடியா சர்க்கிள் எனப்படும் போனா விஸ்டாவில் உள்ள நிலப்பகுதியாகும். இங்கு நீண்டகாலம் குடியிருப்பாளர்கள் தங்கக்கூடிய இடமாகவும் முதல் தளம் வர்த்தக பகுதியாகவும் விளங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்