தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதவி இலக்கிய மன்றத்தின் 44ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா

1 mins read
b1aca5a3-e261-48ce-a939-56b81a1e6b70
மூத்த தமிழாசிரியர் திரு சாமிக்கண்ணுக்கு (நடுவில்) கோ. சாரங்கபாணி நினைவு விருது வழங்கப்பட்டது. - படம்: தியாக. இரமேஷ்

மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தனின் தலைமையில் சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் மே 11ஆம் தேதி 44 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழாவை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கொண்டாடியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கலந்துகொண்டார். நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்கள் ஆர்.தினகரன், கே.கார்த்திகேயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோ கா லியோங் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய துணை அமைச்சர், “சிங்கப்பூரில் பல்லினக் கலாசாரம் மற்றும் இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு அளப்பரியது,” என்று கூறினார்.

முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு பாட்டுமன்ற நடுவர் முனைவர் மன்னை ராஜகோபாலன் மற்றும் குழுவினர்கள் நிகழ்ச்சி படைத்தனர்.  

மூத்த தமிழாசிரியர் திரு சாமிக்கண்ணுக்கு கோ. சாரங்கபாணி நினைவு விருதும், சமூகப் பணியாற்றும் திருவாட்டி பிரியா சாமிநாதனுக்கு மாதவி கண்ட மாதரசி விருதும் வழங்கப்பட்டன.

மாணவர்களும் உள்ளூர் கலைஞர்களும் படைத்த அங்கங்கள் எப்போதும்போல் பரவசமூட்டின.

குறிப்புச் சொற்கள்