நச்சுத்தன்மை அதிகம் உள்ள ரசாயனக் கலவை கொண்ட பொருள்களை தனது இணையப்பக்கத்திலிருந்து நீக்கிவிட்டதாக இணையம் வழி சில்லறை வர்த்தகம் செய்யும் ஷீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தப் பொருள்களில் நச்சுத்தன்மை அதிகமுள்ள ரசாயனம் இருப்பதைத் தென்கொரிய அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, அந்நிறுனம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
நச்சுத்தன்மை அதிகமுள்ள ரசாயனக் கலவை கொண்ட பொருள்களை சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்ட ஷீன் நிறுவனம், அதன் இணையப்பக்கத்தில் உள்ள விற்பனைப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டதாகத் சிங்கப்பூர் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்தது.
நச்சுத்தன்மை அதிகமுள்ள ரசாயனக் கலவை கொண்ட பொருள்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
சிறுவர்களுக்கான காலணிகள், பைகள் போன்ற பொருள்களில் நச்சுத்தன்மை மிக்க ரசாயனம் இருப்பதை தென்கொரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஷீன் சீனாவில் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

