சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் முத்திரைப் பதிவு, மருத்துவப் பொருள்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதாக அந்த மருத்துவமனை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 4ஆம் தேதி) அன்று தனது ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஒரு புகைப்படத்தை போட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, தனது முத்திரைப் பதிவுடன் மருத்துவப் பொருள்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் நான்கு போலி விளம்பரங்களை அது இணைத்துள்ளது.
அந்தப் புகைப்படத்தில் ‘ஆக்சிமீட்டர்’ கருவி, கண்பார்வை குறையை நீக்கவல்லதாகக் கூறப்படும் சொட்டு மருந்து ஆகியவை தொடர்பாக அந்தப் போலி விளம்பரங்கள் பயன்படுத்துவதாக மருத்துவமனை கூறியுள்ளது.

