உலோகக் கூண்டில் கைவிடப்பட்ட பூனை: தகவலுக்கு எஸ்பிசிஏ முறையீடு

உலோகக் கூண்டில் கைவிடப்பட்ட பூனை: தகவலுக்கு எஸ்பிசிஏ முறையீடு

1 mins read
1736dffa-5d32-47f6-b1d3-a7d6a9600f0e
பூனை தொடர்ந்து அந்நியர்களிடமிருந்து பாசத்தைத் தேடுகிறது. - படம்: விலங்கு வதைத் தடுப்புச் சங்கம்

புளோக் 374 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32 இல் மே 24ஆம் தேதி காலை 6.30 மணியளவில் உலோகக் கூண்டு ஒன்றில் பழுப்பு நிறப் பூனை ஒன்று அடைக்கப்பட்டிருப்பதாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்திற்குத் (எஸ்பிசிஏ) தகவல் கிடைத்தது.

கூரையிடப்படாத இடத்தில் அக்கூண்டு வைக்கப்பட்டிருந்ததால் வெப்பம், மழை போன்றவற்றால் பூனை பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அப்பூனையை உரிமையாளர் கைவிட்டதாக எஸ்பிசிஏ கருதுவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அது தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதை உடனே எஸ்பிசிஏயிடம் தெரிவிக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அந்தப் பூனையின்மீது காயங்கள் எதுவும் இல்லை என்றும் அது எலும்பும் தோலுமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்பூனைக்குப் பராமரிப்பு வழங்கப்பட்டதற்கான சிறிய சான்றுகள் கூட இல்லை என மதர்ஷிப்பிடம் பேசிய எஸ்பிசிஏ தெரிவித்தது.

அதிர்ஷ்டவசமாக, எஸ்பிசிஏயின் மீட்பு அதிகாரி கூண்டுக்குப் பின்னால் அதனுடன் தொடர்பு கொண்டபோது, ​​பூனை ஒரு நட்பான மனநிலையைக் காட்டியதாக அவர் மதர்ஷிப்பிடம் கூறினார்.

இச்சம்பவம் குறித்து விலங்குநல மருத்துவச் சேவைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்