‘பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் காடழிப்பைத் தடுக்கத் தவறிவிட்டன’

‘பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் காடழிப்பைத் தடுக்கத் தவறிவிட்டன’

1 mins read
91c35548-8cda-45af-96a5-b1707e1c9f7b
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் உள்ள பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

நைரோபி: காடழிப்பைத் தடுக்க உலகளாவிய பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுற்றுப்புறத் திட்டம் ஜூன் 10ஆம் தேதியன்று தெரிவித்தது.

காடழிப்பைத் தடுக்க வகுக்கப்பட்ட இலக்கை உலக நாடுகள் எட்டவில்லை என்று அது கூறியது.

இதனால் பசுமைமிக்க, மீள்திறன்மிக்க, செழுமையான எதிர்காலத்தை உருவாக்க முடியாமல் போகக்கூடும் என்று அத்திட்டம் குறித்த அச்சம் நிலவுகிறது. பல நாடுகளில் காடழிப்பைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தும் இல்லாததற்குச் சமம் எனக் குறைகூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிநிலை, வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, பல்வேறு உயிரினங்கள் அழியும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்