மேலும் மூவர் நாடு கடத்தப்பட்டனர்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

மேலும் மூவர் நாடு கடத்தப்பட்டனர்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

1 mins read
$3பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது
8a192905-a336-474d-ba45-1876aa3a10e8
(இடமிருந்து) ஸாங் ருய்ஜின், சென் கிங்யுவான், லின் பாவ்யிங் ஆகியோர் சனிக்கிழமை ஜூன் 15ஆம் தேதியன்று நாடுகடத்தப்பட்டனர். - படம்: நீதிமன்ற ஆவணம்

சிங்கப்பூரில் $3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்தில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த மேலும் மூவர் கம்போடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதை சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி) அன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. ஸாங் ருய்ஜின், சென் கிங்யுவான், லின் பாவ்யிங் ஆகியோரே கம்போடியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மூவராவர்.

அம்மூவருக்கும் இனி சிங்கப்பூருக்குள் வர அனுமதி இல்லை என்று ஆணையம் தெரிவித்தது.

அம்மூவரும் பல்வேறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, போலிப் பத்திரத் தயாரிப்பு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஸாங் ருய்ஜின் என்பவரிடமிருந்து, $118 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது காதலியும் இந்த வழக்கில் ஒரே பெண்மணியுமான லின் என்பவரிடமிருந்து $154 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளும் மூன்றாம் நபரான சென் என்பவரிடமிருந்து $21 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸாங் சீன நாட்டைச் நேர்ந்தவர், செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் நாட்டு கடப்பிதழ் வைத்துள்ளார்.

ஸாங்கின் காதலி லின் சீன நாட்டவர். இவர் கம்போடியா, டோமினிக்கா, துருக்கி நாட்டு பாஸ்போர்ட்டுகள் வைத்துள்ளார். மூன்றாம் நபரான சென் கம்போடிய நாட்டவர் என்பதுடன் சீனா, டோமினிக்கா நாட்டு கடப்பிதழ்கள் வைத்திருப்பவர்.

குறிப்புச் சொற்கள்