போலி தங்கத் தகடுகளைக் கொண்டு ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று (ஜூன் 20) கைதான அந்த ஆடவர்கள் 52லிருந்து 62 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 21) அறிக்கை ஒன்றின் மூலம் காவல்துறையினர் தெரிவித்தனர். பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு ஆடவர்கள் இருவர் தன்னிடம் தங்கத் தகடுகளைத் தந்ததாகவும் தான் 4,000 வெள்ளித் தொகைக்காக ஏமாற்றப்பட்டதாகவும் மாது ஒருவர் புகார் கொடுத்தார் என்று காவல்துறை குறிப்பிட்டது.
சந்தேக நபர்கள் இருவருக்குத் துணை போனதாக நம்பப்படும் மேலும் ஓர் ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

