தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீன்பிடி குளத்தை நாடும் தூண்டில்காரர்கள்

1 mins read
எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து தற்காலிக மாற்றம்
7d861e61-b19e-47bf-96a6-d1ded2f1bd06
எண்ணெய்க் கசிவுச் சம்பவத்துக்குப் பிறகு பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் எனும் உப்பு நீர் மீன்பிடி குளத்தில் அதிகமானோர் தூண்டிலிடக் கூடுவதாகக் கூறப்பட்டது. - படம்: டி’பெஸ்ட் ரெக்ரியேஷன்

சிங்கப்பூரில் பொழுதுபோக்காக மீன்பிடித்தலில் ஈடுபடும் தூண்டில்காரர்கள் சிலர், அண்மையில் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து மீன்பிடி குளங்களை நாடுவதாகக் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக பிடோக் ஜெட்டியில் மீன்பிடித்தலில் ஈடுபட்ட டெர்ரிக் டான், 47, தற்போது பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் எனும் உப்பு நீர் மீன்பிடி குளத்திற்குச் செல்வதாகக் கூறினார்.

எண்ணெய்க் கசிவை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிய அவர் பிள்ளைகளுடன் இந்த மீன்பிடி குளத்திற்குச் செல்ல முடிவெடுத்ததாகக் கூறினார்.

வழக்கமாக இந்த மீன்பிடி குளத்திற்கு பள்ளி விடுமுறைக் காலகட்டங்களில் அன்றாடம் 100 முதல் 120 வாடிக்கையாளர்கள் வருவர் என்று கூறிய அதன் பொது மேலாளர், ஜூன் 17 முதல் 21ஆம் தேதி வரை அந்த எண்ணிக்கை 190 முதல் 225 வரை அதிகரித்ததாகக் கூறினார்.

டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் மீன்பிடி குளத்தில் தாங்களே பிடித்த மீன்களுடன் திரு டானின் மகனும் மகளும்.
டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் மீன்பிடி குளத்தில் தாங்களே பிடித்த மீன்களுடன் திரு டானின் மகனும் மகளும். - படங்கள்: டெர்ரிக் டான்

பிடோக் ஜெட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வாரம் இருமுறை மீன்பிடித்தலில் ஈடுபட்டதாகக் கூறும் ஹென்றி ஹோ, 47, தற்காலிமாக இந்த மீன்பிடி குளத்திற்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறினார்.

பிடோக் ஜெட்டிக்கு டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் மீன்பிடி குளம் சிறந்த மாற்றாக அமைவதாகக் கூறுகிறார் ஹென்றி ஹோ, 47.
பிடோக் ஜெட்டிக்கு டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் மீன்பிடி குளம் சிறந்த மாற்றாக அமைவதாகக் கூறுகிறார் ஹென்றி ஹோ, 47. - படம்: ஹென்றி ஹோ

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருக்கும் உள்ள இந்த உப்பு நீர் மீன்பிடி குளத்தை 2014ஆம் ஆண்டு முதல் டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

சிங்கப்பூரின் மற்ற மீன்பிடி குளங்கள் கடந்த வாரம் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்