கரையோரப் பூந்தோட்டம் ஜூன் 29ஆம் தேதியன்று அதன் 12வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
ஆண்டு விழாவையும் டிரிப்அட்வைசர் இணையப்பக்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பிரபல சுற்றுலாத் தலப் பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்திருப்பதையும் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஜூன் 29, 30ஆம் தேதியன்று கரையோரப் பூந்தோட்டத்தின் பிரபல ஒளிவீச்சு அம்சத்தில் சிங்கப்பூரின் கொடியில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் ஆதிக்கம் செலுத்தும்.
தி ஃபிளாவர் டோம், கிளவுட் ஃபாரஸ்ட், 18 சூப்பர்டிரீஸ் ஆகியவற்றின் மீது சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஒளி வீசப்படும். இவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறை.
டிரிப்அட்வைசர் பட்டியலில் கரையோரப் பூந்தோட்டம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் இடத்தில் நியூயார்க் நகரில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டடமும் இரண்டாவது இடத்தில் பாரிஸ் நகரில் உள்ள ஐஃபில் கோபுரமும் உள்ளன.
சிறப்பு ஒளிவெள்ளம் ஜூன் 29, 30ஆம் தேதிகளில் மாலை 6.45 மணியிலிருந்து பின்னிரவு 1 மணி வரை நடைபெறும்.
ஜூன் 30ஆம் தேதியன்று காலை 9 மணியிலிருந்து தி பிளாவர் டோமிற்குச் செல்பவர்களுக்கு இலவசப் பூங்கொத்துகள் தரப்படும் (இருப்பு இருக்கும் வரை).

