வலையொளிப் பதிவை மீட்டுக்கொண்டார் லியோங் மன் வாய்

வலையொளிப் பதிவை மீட்டுக்கொண்டார் லியோங் மன் வாய்

2 mins read
3908aaf9-f015-4674-a914-d434bf4e0515
வலையொளியில் லியோங் மன் வாய் கூறியது நாடாளுமன்ற நடப்பை வெகுவாக திரித்துக் கூறும் செயலாகும் என மன்ற நாயகர் சியா கியன் பெங் கூறினார். - படம்: தகவல், தொடர்பு அமைச்சு

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கின் நடுநிலை குறித்து கேள்வி எழுப்பிய தமது வலையொளிப் பதிவை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் மீட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2ஆம் தேதி) கூடியது. அப்பொழுது ‘யா லா பட்’ என்ற வலையொளிப் பதிவில் பங்கேற்று அதில் மன்ற நாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணைக் கேள்விகள் கேட்பதில் நியாயமாக நடந்துகொள்வது தொடர்பாக தம்மைப் பற்றிக் களங்கம் கற்பித்ததை திரு லியோங் மீட்டுக்கொண்டுள்ளதாக திரு சியா கியன் பெங் தெரிவித்தார்.

அந்த வலையொளிப் பதிவு மே மாதம் 14ஆம் தேதி வெளிவந்தது. அதன் தொடக்கத்தில், வலையொளியை வழிநடத்தியவர், “நாங்கள் பார்த்த நாடாளுமன்ற விவாதங்களில் மன்ற நாயகர் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா என உறுப்பினர்களைப் பார்த்துக் கேட்கும்போது நீங்கள்தான் முதலில் கையை தூக்குபவர்,” எனக் கூறியிருந்தார்.

இதைக் கேள்வியுற்ற திரு லியோங், சிறிது நேரம் வாய்விட்டு சிரித்தபின், “அதில் கடைசியாக கேள்வி கேட்க கூப்பிடப்படுபவரும் நான்தான்,” என்று பதிலளித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி செவ்வாய்க்கிழமை (ஜூலை 2ஆம் தேதி) குறிப்பிட்ட திரு சியா, திரு லியோங்கின் கூற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெகுவாகத் திரித்துக் கூறும் செயல் என்று தெரிவித்தார்

“அது உறுப்பினர்களைக் கேள்வி கேட்க அழைக்கும் எனது செயல் தொடர்பான நியாய உணர்வையும் நடுநிலையையும் கேள்விக்குறியாக்கும் செயலாகும். இது நாடாளுமன்ற நடவடிக்கைகளை நான் நடத்துவது குறித்து என் செயல்பாட்டைக் குறைகூறுவதாகும்,” என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்வலையொளிநாடாளுமன்ற உறுப்பினர்கள்