சேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 27.9% அதிகரிப்பு

1 mins read
ad444a88-d534-4928-a079-cf4b6eb9023c
சேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கெரி மொக். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விமானத்தினுள் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் போன்றவற்றை அளிக்கும் சேட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

2024ஆம் நிதியாண்டுக்கு திரு கெரி மொக்குக்கு 2.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சம்பளத் திட்டம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு சேட்ஸ், முதன்முறையாக லாபம் ஈட்டியதையடுத்து திரு மொக்கின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தான் வாங்கிய சரக்கு நிர்வாக நிறுவனம் ஒன்றின் மூலமும் அது வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளது.

திரு மொக்கிற்கு 920,000 வெள்ளி சம்பளமாக வழங்கப்படும், 900,000 வெள்ளி போனஸ் கட்டணங்களாக அளிக்கப்படும். எஞ்சிய தொகையில் 540,000 வெள்ளி நிறுவனப் பங்குகளில் ஈட்டப்படும் லாபத்திலிருந்தும் 74,000 வெள்ளி அனுகூல வசதிகள் (பெனிஃபிட்ஸ்) வாயிலாகவும் வழங்கப்படும்.

2023ஆம் நிதியாண்டில் திரு மொக்கிற்கான சம்பளத் திட்டத்தின் மதிப்பு 1.9 மில்லியன் வெள்ளியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு 53 வயதாகும் அவருக்கு வழங்கப்படவுள்ள சம்பளத்தின் மதிப்பு 27.9 விழுக்காடு அதிகமாகும்.

சம்பளத்தை மட்டும் கருத்தில்கொள்ளும்போது திரு மொக்கிற்கு வழங்கப்படும் தொகை 4.9 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் 2023ஆம் நிதியாண்டில் அவருக்கு நிறுவனத்தின் பங்குகளின் மூலம் வரும் லாபத்தில் எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்