இறுதிச் சடங்கில் பங்கேற்று வீடு திரும்பிய 11 பேர் பலி

1 mins read
08d7aa70-b456-4dd0-bff5-1b4e5a291376
டிரக்கில் சென்றவர்களில் மூன்று பேர் மட்டுமே உயிர் தப்பினர். - கோப்புப் படம்: ஊடகம்

மணிலா: பிலிப்பீன்ஸில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிறகு வீடு திரும்பிய 11 பேர் விபத்தில் கொல்லப்பட்டனர்.

ஜுலை 11 ஆம் தேதி காவல்துறையினர் இதனைத் தெரிவித்தனர்.

ககயான் மாநிலத்தில் உள்ள அபுலுக் நகராட்சி சந்திப்பில் நள்ளிரக்குப் பிறகு விபத்து நிகழ்ந்தது.

மொத்தம் 14 பேரை ஏற்றிக்கொண்டு டிரக் சென்று கொண்டிருந்தது. முக்கிய நெடுஞ்சாலையின் சந்திப்பை அடைந்ததும் டிரக் மீது பயணிகள் பேருந்து மோதியது.

பயணிகள் பேருந்தில் இருந்த யாம் காயம் அடையவில்லை. ஆனால் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் படுகாயம் அடைந்தனர். மேலும் 23 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

டிரக்கில் இருந்தவர்களில் மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் என்று காவல்துறை மேஜர் அன்டோனியோ பலாட்டோ ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

டொயோட்டா டிரக்கை ஓட்டிய ஓட்டுநருக்கு அந்தப் பகுதி அதிக பழக்கமில்லை என்றும் நெடுஞ்சாலை சந்திப்பை நெருங்குவதை பற்றி அவருக்குத் தெரியவில்லை என்றும் காவல் துறையைச் சேர்ந்த ஜுன்-ஜுன் டோரியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்