சன்டெக் சிட்டி நீரூற்றில் விழுந்த கார்

சன்டெக் சிட்டி நீரூற்றில் விழுந்த கார்

1 mins read
d1c39bd4-8ca6-4a03-be22-596bd0101bd0
சாலை விபத்தை அடுத்து, சன்டெக் சிட்டி நீரூற்றில் (வௌன்டன் ஆஃப் வெல்த்) கவிழ்ந்து கிடந்த கார். - படம்: Complaint Singapore and Roads.sg / ஃபேஸ்புக்
multi-img1 of 2

விபத்து காரணமாக சன்டெக் சிட்டி நீரூற்றில் (ஃபெளண்டன் ஆஃப் வெல்த்)  கார் ஒன்று விழுந்தது. இந்தச் சம்பவம் ஜூலை 12ஆம் தேதி பின்னிரவு நிகழ்ந்தது.

டான் டோக் செங் மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

3 தெமாசெக் போலிவார்ட்டில் சாலை விபத்து நிகழ்ந்ததாகப் பின்னிரவு 12.20 மணி அளவில் தகவல் கிடைத்தது என அது கூறியது.

கார் ஒன்று கவிழ்ந்து கிடந்ததைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

காரின் சில பாகங்கள் உடைந்து அதைச் சுற்றி சிதறிக் கிடந்ததைக் காண முடிந்தது.

சன்டெக் சிட்டி நீரூற்று, பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 5ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளதாக சன்டெக் சிட்டியின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான முறையில் கார் ஓட்டியது தொடர்பாக 56 வயது ஆடவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அந்த ஆடவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்