நிறுவனங்களிடம் வளர்ந்துவரும் இணையக் காப்புறுதி முறை

1 mins read
93b8187d-eba9-45ea-9dc1-da61e2b9f285
பெருநிறுவனங்கள் இணையத் தாக்குதலுக்கு ஆளாகும் செய்திகள் வெளியாவதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இணையக் காப்புறுதியை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வர்த்தக நிறுவனங்களிடம் இணையம் வழியான காப்புறுதி முறை வளர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பெருநிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இணையத் தாக்குதல் தொடர்பான செய்திகளை அறிந்து கடந்த சில ஆண்டுகளாக இணைய காப்புறுதியை நிறுவனங்கள் மேற்கொண்டு வரவதாக எம்எஸ்ஐஜி இன்சூரன்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எங்களது அடிப்படை காப்புறுதித் திட்டங்களோடு தற்போது இணையக் காப்புறுதியும் இணைந்து வருகிறது. அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதனை மேற்கொள்வதைக் காண முடிகிறது,” என்றார் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஜெரமி லியன் தெரிவித்து உள்ளார்.

அச்சுறுத்தல் நிலவரம் அதிகரிப்பதாலும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான விதிமுறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதாலும் அத்தகைய போக்கு காணப்படுகிறது என்று வெரிஸன் திரட் ரிசர்ச் அட்வைஸரி சென்டரின் இயக்குநர் அன்ஷுமன் சர்மா கூறினார்.

இணையத் தாக்குதலால் நிதிக்கு ஏற்படும் அபாயத்தை சமாளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இணையக் காப்புறுதி முறை வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்