சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி தொடர்ந்து ஐந்து மாதங்களாக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் 8.7 விழுக்காடு குறைந்தது.
முக்கிய ஏற்றுமதி 1.3 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.
மின்னணுவியல் பொருள்களுக்கான ஏற்றுமதி ஜூன் மாதம் 9.5 விழுக்காடு சரிந்தது.
மே மாதம் அது 19.6 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.
ஜூன் மாதம், தொலைதொடர்பு சாதனங்களுக்கான ஏற்றுமதி 50.5 விழுக்காடு சரிந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
தங்கக் கட்டிகளுக்கான ஏற்றுமதி 51.1 விழுக்காடு குறைந்தது.
மின்னணுவியல் இல்லாப் பொருள்களுக்கான ஏற்றுமதி 8.5 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் ஏற்றுமதி பட்டியலில் முன்னணி வகிக்கும் பத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் ஜூன் மாதம் ஒட்டுமொத்த அளவில் வீழ்ச்சி கண்டன.
இதனிடையே, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் 21.3 விழுக்காடு சரிவைச் சந்தித்தன. இவை மே மாதம் காணப்பட்ட 12.1 விழுக்காடு வளர்ச்சிக்கு மாறுப்பட்டது.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் விகிதமும் 11.2 விழுக்காடு குறைந்தன.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் விகிதம் சாதகமான அளவாக 6.2 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. அதே வேளையில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி விகிதங்களும் அதிகரித்தன.

