மலேசியாவில் இருந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஒரு டன் எடையுள்ள உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) கைப்பற்றி உள்ளது. உடனடி உணவுப்பொருள்களுடன் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களும் அவற்றுள் அடங்கும்.
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளுடன் எஸ்எஃப்ஏ அதிகாரிகள் இணைந்து நடத்திய ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடத்திய சோதனையில் அவை பிடிபட்டதாக அவ்விரண்டு அமைப்புகளும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) அறிக்கை ஒன்றில் கூறின.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு லாரிகள் செல்வதை அறிந்து அதுபற்றி எஸ்எஃப்ஏவிடம் தெரிவித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.