‘யூடிரிப்’ அட்டையைப் பயன்படுத்துபவர்கள் இனி மின்னிலக்கப் பணப்பை மூலம் தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைத் திருப்பி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு ‘யூடிரிப்’ அட்டையில் நிரப்பப்பட்ட தொகைக்கு மட்டுமே இது பொருந்தும் என்று சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ‘யூடிரிப்’ அட்டை பன்னாணய (multi-currency) சேவையை வழங்கும் நிறுவனம் கூறியது.
அட்டையிலிருந்து வங்கிக் கணக்கிற்கு சிங்கப்பூர் நாணயத்தில் மட்டுமே அனுப்பலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இத்தகைய பணபரிவர்த்தனைகள் ‘யூடிரிப்’ இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
கடன் அட்டை, பற்றட்டை மூலம் ‘யூடிரிப்’ அட்டையில் நிரப்பப்பட்டுள்ள தொகையை வெளியே எடுக்க முடியாது.
இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து ‘யூடிரிப்’ அட்டையைப் பயன்படுத்தி 10 முறை மட்டுமே பணத்தை சேவைக் கட்டணமின்றி வெளியே எடுக்கலாம்.
அதன் பிறகு பணத்தை எடுத்தால் $10 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

