பூன் லேயில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30ஆம் தேதி) அன்று சிமெண்ட் லாரியின் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்தது.
எனினும், இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேள்விகளுக்கு பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படை, கார்ப்பரேஷன் சாலையில் ஏறப்ட்ட இந்தத் தீச்சம்பவம் பற்றி தனக்கு காலை கிட்டத்தட்ட 8.05 மணிக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
நீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த தீச்சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், சரக்கு வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவது தெரிகிறது.
எக்ஸ் தளத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் பதிவேற்றிய தகவலின்படி, காலை 8.10 மணிக்கு ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1ஐ நோக்கிச் செல்லும் கார்ப்பரேஷன் சாலையில் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்தது.
அந்தச் சாலையின் இடது தடத்தை தவிர்க்குமாறு ஆணையம் வாகனமோட்டிகளை அறிவுறுத்தியது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

