ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, $60 மில்லியன்மதிப்பிலான வேளாண்-உணவுக் குழும உருமாற்ற நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கு $25.7 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 திட்டங்களுக்காக 42 நிறுவனங்களுக்கு அவ்வாறு நிதி வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூரின் வேளாண்-உணவுத் துறையை அதிக உற்பத்தித் திறன் மிக்கதாய், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான மீள்திறனுடன் வளங்கள் மிக்கதாய் விளங்கச் செய்ய இந்த நிதி ஆதரவு அளிக்கிறது.
வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எரிசக்திச் சிக்கனத்திற்கு வகைசெய்ய விரும்பும் நிறுவனங்கள் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.