சிங்கப்பூர் வர்த்தகர் டேவிட் யோங் மீது கூடுதல் ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள்

1 mins read
0060fbdf-6b2f-4987-b53e-160fe3ee9128
சிங்கப்பூர் வர்த்தகர் டேவிட் யோங். - படம்: சாவ்பாவ்

போலிக் கணக்குகளைக் காட்டியதன் தொடர்பில் சிங்கப்பூர் வர்த்தகரான டேவிட் யோங் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எவர்கிரீன் ஹோல்டிங்ஸ் குழுமம் சம்பந்தப்பட்ட வாக்குறுதி ஆவணம் தொடர்பில் டேவிட் யோங் போலிக் கணக்குகளை தயார்செய்ததாக நம்பப்படுகிறது. அவர், ஏமாற்றும் நோக்குடன், ஜோலீன் லோவ் மொங் ஹான் எனும் தனது ஊழியரை எவர்கிரீன் ஜிஎச் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆவணங்களில் போலித் தகவல்களைச் சேர்க்க வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

எவர்கிரீன் ‌ஜிஎச், எவெர்கிரீன் ஹோல்டிங்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றாகும்.

யோங் குங் லின் என்ற முழுப் பெயரைக் கொண்ட டேவிட் யோங், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதிவாக்கில் லோவை, மேலும் இரு வரிக் கட்டண ஆவணங்களில் போலித் தகவல்களைச் சேர்க்க வைத்ததாக வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த ஆவணங்கள், இரு வெவ்வேறு தரப்பினருக்கு அறைகலன்களை விற்பதன் தொடர்பில் தயார்செய்யப்பட்டவை என்று நம்பப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 3) போலிக் கணக்குகளைத் தயார்செய்ததாக யோங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

யோங், நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூப்பர் ரிச் இன் கொரியா’ எனும் தொடரில் இடம்பெற்றவர். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) கைதுசெய்யப்பட்ட அவர், மத்திய காவல்துறைப் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்