செந்தோசா கடற்கரைக்குச் சக்கர நாற்காலியில் செல்ல புதிய தடம்

செந்தோசா கடற்கரைக்குச் சக்கர நாற்காலியில் செல்ல புதிய தடம்

2 mins read
e1c3e302-60ce-4cda-a8da-866128687786
‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் தி டிஸ்யேபல்டு’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் செந்தோசாவில் உள்ள சிலோசோ கடற்கரையில் சக்கரநாற்காலி செல்லக்கூடிய தடத்தை சோதித்துப் பார்த்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

விக்டர் சிங் என்பவருக்கு கடற்கரைக்குச் செல்வதென்றால் கொள்ளை ஆசை.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அவர் கடற்கரைக்கு சென்றதில்லை.

திரு சிங் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் நடமாடுகிறார். கடற்கரை மண் எனது சக்கரநாற்காலியின் சக்கரங்களில் ஒட்டிக்கொண்டுவிடும்.

“அது சக்கரநாற்காலியில் அழுக்குப் படிய வைப்பதுடன் மிகுந்த தொல்லை தரும் ஒரு பிரச்சினை,” என்று அவர் கூறினார்.

அதனால்தான், செந்தோசாவின் சிலோசோ கடற்கரையில் சக்கரநாற்காலித் தடத்தை கண்டவுடன், 53 வயது சிங்குக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அந்தத் தடம் 23 மீட்டர் நீள வடிவில் செந்தோசாவின் எமரால்ட் தளத்திலிருந்து கடற்கரைவரை செல்கிறது. ஒருவர் சறுக்கி விழாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள அந்தத் தடம் சக்கரநாற்காலி, மற்ற உடற்குறை உள்ளவர்கள் எளிதில் கடற்கரை வரை செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் ஆனால், கடல்நீர் இருக்கும் இடம் வரை செல்லாமல் அதற்கு சற்று தூரத்தில் அந்தத் தடம் முடிவடைகிறது.

அந்தத் தடம், சனிக்கிழமை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செந்தோசா வளர்ச்சிக் கழகம், எஸ்ஜி எனேபல் அமைப்பு ஆகியவை சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியின் ஆதரவுடன் திறந்து வைக்கப்பட்டது.

செந்தோசா தீவிலுள்ள இந்தத் தடத்துடன் அண்மையில் உடற்குறையுள்ளோருக்கு தீவைச் சுற்றிக் காட்டும் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செந்தோசாவை பயணிகள் தேர்வு செய்யும் இடமாக, அது அனைவரையும் உள்ளடக்கும் தீவாக இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

“இந்தப் புத்தாக்க முயற்சிகள் உடற்குறையுள்ளோர், நடமாட சிரமப்படுவோர், என அனைவருக்கும் புது அனுபவத்தைத் தந்து பயணத்துறையை எல்லோருக்குமான ஒன்றாக ஆக்கும் நோக்கம் கொண்டது,” என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் கூறியது.

செந்தோசாவில் ஹோட்டல்கள், இரவு விருந்து உணவு மையங்கள் போன்றவற்றின் வழித்தடங்கள் மின்தூக்கிகள் ஆகியன உடற்குறையுள்ளோரும் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்