சிங்கப்பூர் இரவுத் திருவிழா 15வது முறையாக மேலும் பெரிய, மேம்பட்ட வகையில் மூன்று வாரயிறுதிகளில் நடைபெற உள்ளது.
அதோடு, நான்காவது விழாக் கிராமமும் அதில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது.
‘ஆர்ட் ஆஃப் பிளே’ எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள சிங்கப்பூர் இரவுத் திருவிழா பிராஸ் பாசா-பூகிஸ் வட்டாரத்தில் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 7 வரை நடைபெறும்.
சிங்கப்பூர் இரவுத் திருவிழாவின் முக்கிய அம்சம் ‘வொண்டர்வோர்ல்டு’. இவ்விடம் 1950களில் பிரபலமாக இருந்த கேளிக்கைப் பூங்காக்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
‘வொண்டர்வோர்ல்டு’க்கான நுழைவுச்சீட்டுகளை இரவுத் திருவிழா இணையத்தளத்தில் அல்லது ‘குளூக்’ தளத்தில் $25க்கு வாங்கிக்கொள்ளலாம்.
மூன்று வார இறுதிகளில் 50க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

