சூடான் தலைநகர் கர்த்தூமில் இருந்து இரண்டு சிங்கப்பூர் குடும்பங்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
தற்போது சூடானில் இரு குழுவினருக்கு இடையே உள்நாட்டு பூசல் வெடித்துள்ளது, அதனால் அந்நாடு வன்முறை களமாக மாறியுள்ளது.
சூடானில் உள்ள சிங்கப்பூரர்கள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியுறவு அமைச்சிடம் விசாரித்தது.
அதற்கு பதிலளித்த அமைச்சு 14 சிங்கப்பூரர்களுடன் ஒரு குடும்ப உறுப்பினரும் பாதுகாப்பாக கர்த்தூமில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியது.
சிங்கப்பூரர்களுடன் மலேசியர்கள் மற்றும் மற்ற நாட்டு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மலேசியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உதவியால் சிங்கப்பூரர்கள் வெளியேற்றப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சூடானில் வன்முறை வெடித்ததில் இருந்து சிங்கப்பூரர்கள் தூதரகத்தை அணுகுமாறு அமைச்சு வெளியிட்ட தகவல் குறித்தும் அவர் கூறினார்.
சூடான் வன்முறையால் நூற்றுக்கும் அதிகமானோர் மாண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
உலக நாடுகள் பல தங்களது மக்களை சூடானில் இருந்து வெளியேற்றி வருகின்றது.