மெக்கன்ஸி ரோட்டில் திடீர் வெள்ள அபாயம்

மெக்கன்ஸி ரோட்டில் திடீர் வெள்ள அபாயம்

2 mins read
அடுத்த ஓரிரு நாள்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது: வானிலை மையம்
5aa93b59-8d9c-496b-be61-04d0440e6025
கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சைக்கிளில் ஷென்டன் வேயில் பயணம் செய்த உணவு விநியோக ஊழியர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெக்கன்ஸி ரோட்டில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியை மோட்டார் வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) கேட்டுக்கொண்டது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மதியம் 12.55 மணிமுதல் பகல் 2 மணி வரை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் தேசிய தண்ணீர் முகவையான பியுபி அந்த அறிவிப்பை வெளியிட்டது.

கழகம், எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் புக்கிட் தீமா வட்டாரத்தை வாகனவோட்டிகள் அடுத்த சில மணி நேரத்துக்குத் தவிர்க்கும்படி குறிப்பிட்டது.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலான மதிய வேளைகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கணித்திருந்தது. சில நாள்களில் மாலை நேரம் வரை அவ்வாறு மழை பெய்யலாம்.

சுமத்ராவில் நிலவும் புயல் காரணமாக, ஒன்று அல்லது இரண்டு நாள்களில் அதிகாலை மற்றும் காலை வேளைகளில் பலத்த காற்று, பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியிலும் திடீர் வெள்ள அபாயம் உள்ளதால் அப்பகுதியையும் தவிர்க்கும்படி பியூபி கேட்டுக்கொண்டது.

பிற்பகல் 3.50 மணிமுதல் 4.30 மணி வரையில் தீவின் தெற்கு, மேற்கு வட்டாரங்களில் பெருமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில மணி நேரங்களில் தவிர்க்க வேண்டிய பகுதிகளை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பியூபி பதிவிட்டது.

3.30 மணிமுதல் கல் வே, கல் சர்க்கிள் சாலைச் சந்திப்பு, ஜாலான் பூன்லே பகுதி, இன்டர்நேஷனல் ரோடு முதல் என்டர்பிரைஸ் ரோடு வரை

3.41 மணிமுதல் அப்பர் ஜூரோங் ரோடு, பெனோய் ரோடு முதல் கியான் தியான் ரோடு வரை

3.46 மணிமுதல்: என்டர்பிரைஸ் ரோடு, வான்லீ ரோடு முதல் ஜாலான் பூன் லே வரை

குறிப்புச் சொற்கள்