‘ஏஐ’ பயன்படுத்த வணிகங்களுக்கு ஆதரவு

‘ஏஐ’ பயன்படுத்த வணிகங்களுக்கு ஆதரவு

2 mins read
484dc7a3-7973-434f-95bc-85692537039e
செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி வணிகத்தை விரிவாக்கவும், மாற்றவும் விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க புதிய செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் திட்டம் அறிமுகம் காண்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி வணிகத்தை விரிவாக்கவும், மாற்றவும் விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க புதிய செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் திட்டம் அறிமுகம் காண்கிறது.

இதில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்புடைய ஆதரவையும் பயிற்சிகளையும் உள்ளடக்கும்.

விரிவடையும் தொழில்நிறுவனப் புத்தாக்கத் திட்டம்

கடந்த 2023ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தொழில்நிறுவனப் புத்தாக்கத் திட்டம் விரிவடையவுள்ளது.

400 விழுக்காடு வரிக் கழிவு வழங்கும் இத்திட்டம், 2027-2028 ஆம் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான செலவினங்களுக்குத் தகுதிபெறும். இதில், ஓராண்டுக்கான மதிப்பீடு $50,000 அதிகபட்சம் இருக்கும்.

தகுதிபெறும் செலவினங்களை ரொக்க வழங்கீடாகப் பெறும் வாய்ப்பு இப்புதிய செயல்பாடுகளில் இருக்காது.

இதுகுறித்த விவரங்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் அறிவிக்கும்.

விரிவடையும் உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம்

நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவை ஏற்க ஆதரவளிக்கும் இத்திட்டத்தின்கீழ், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் அமைந்த தீர்வுகள் வணிகங்களுக்குக் கிடைக்கும்.

தற்போது மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்க ஆதரவளிக்கும் இத்திட்டம், முன்பே அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள், கருவிகள் ஆகியவற்றின் உதவியுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, தற்போதைய செயல்முறைகளைத் தானியக்கமயமாக்க உதவும்.

‘ஏஐ’ அடிப்படையிலான பொருளியலுக்கு ஊழியர்களைத் தயார்ப்படுத்துதல்

வணிகங்களைப் போலவே, ஊழியர்களுக்கும் ஆதரவளிப்பது அவசியம் என்றார் பிரதமர் வோங்.

செயற்கை நுண்ணறிவு பணியாற்றும் முறையை மாற்றும். சில பணிகள் தானியக்கமயமாக்கப்படும்; புதிய பணிகள் உருவாகும்; ஆனால், இந்த தொழில்நுட்ப மாற்றங்கள், ஊழியர்களின் நலனைப் பாதிக்க விடமாட்டோம் என்று பிரதமர் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் உறுதியளித்தார்.

கற்றலிலும் மாற்றத்திலும் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் வேலை கிடைக்கவும், நல்ல வருமானத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

உயர்கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்