தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மொழி விழா 2025ல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

1 mins read
38ce861d-394e-42aa-b8dc-1cea7a0e14a3
இவ்வாண்டின் தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகள் ஏப்ரல் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்குகின்றன.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 2

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க புத்தாக்கம்வழி தமிழ்மொழியைப் பறைசாற்றவிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை 6ஆம் தேதி தொடங்கும் தமிழ்மொழி விழாவில் ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் கிட்டத்தட்ட 46 நிகழ்ச்சிகள் தீவெங்கும் நடைபெறவிருக்கின்றன. அவற்றுக்கு 47 இந்திய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

அவற்றில் நான்கு அமைப்புகள் முதன்முறையாக தமிழ்மொழி விழாவில் இணைந்துள்ளன.

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) இடம்பெற்ற தமிழ்மொழி மாதம் 2025ன் முன்னோட்ட நிகழ்ச்சியில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகத் தளங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் தமிழின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு நசிர் கனி சுட்டினார்.

முன்னோட்ட நிகழ்ச்சியில் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் மின்னிலக்க முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்மொழி சார்ந்த விளையாட்டை அறிமுகம் செய்தனர். தமிழ்ப் பேரவை தமிழ்மொழி விழாவில் நடத்தவிருக்கும் ‘யுத்தம் 2025’ தமிழ் விளையாட்டின் முன்னோட்டமாக அது அமைந்தது.

முன்னோட்ட நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக சுமார் 40 உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்கள் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்காரர்களிடமும் மக்களிடமும் தமிழ்மொழி விழாவைப் பற்றி கருத்துத் திரட்டினர்.

சேகரிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வளர்தமிழ் இயக்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேம்படுத்தத் திட்டமிடுகிறது.

தமிழ்மொழி விழா 2025 ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4ஆம் தேதி வரை இடம்பெறும்.

மேல் விவரங்களுக்கு https://www.languagecouncils.sg/tamil/en/events-and-activities/tamil-language-festival-2025 என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்