தமிழ்மொழி விழா 2026: இந்திய மரபுடைமை நிலையத்தில் முன்னோட்ட நிகழ்ச்சி

தமிழ்மொழி விழா 2026: இந்திய மரபுடைமை நிலையத்தில் முன்னோட்ட நிகழ்ச்சி

படம்:visitsingapore.com

13 Mar 2026 - 9:45 pm

1 mins read

தமிழ்மொழி விழா 2026க்கான முன்னோட்ட நிகழ்ச்சி இந்திய மரபுடைமை நிலையத்தில் சனிக்கிழமை (மார்ச் 14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

கேம்பல் லேனில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கிராமிய நடனம், தற்காப்புக் கலை, இசை நாடகம், பாரம்பரிய நடனம் எனப் புலன்களுக்கு விருந்தளிக்கும் அங்கங்கள் பல காத்திருக்கின்றன.

ஆர்வமுள்ளோர் நேரடியாகவோ கீழ்க்காணும் நேரலைக் காணொளி இணைப்பு வழியாகவோ நிகழ்ச்சியைக் காணலாம்:

Watch on YouTube

கலைக்குழுக்கள், கல்வி நிலையங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் முரசும் பங்காளியாக இணைந்துள்ள இந்நிகழ்ச்சியை வானொலிப் படைப்பாளர்கள் ஹலீமா, அப்துல் காதர் இருவரும் வழிநடத்துவர்.

விளையாட்டு அங்கம் வாயிலாகப் பரிசுகளை வெல்ல மாணவர்களுக்கு நல்வாய்ப்பு உள்ளது.

தமிழ்மொழி விழா 2026 பற்றிய அண்மைய விவரங்களுக்குத் தமிழ் முரசுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

குறிப்புச் சொற்கள்