வெளிநாட்டுத் தமிழர்களுக்கும் சேவையாற்றும் தமிழ் முரசு

2 mins read
ffdd5197-4a9b-41d3-bcc8-a166e54ef384
2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் முரசு செயலி வெளிநாட்டில் வாழும் பல தமிழர்களுக்கும் பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டுசேர்க்கிறது. - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூருக்கு அப்பால் கடல் கடந்து பலரின் கைகளில் செயலி மூலம் தவழ்கிறது தமிழ் முரசு.

இந்தியா, மலேசியா, இலங்கை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்களுக்குப் பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டு செல்லும் பணியைத் தமிழ் முரசு செய்து வருகிறது.

“தமிழ் முரசு செயலி மூலம் சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல தகவல்கள் கிடைக்கின்றன. முக்கியமாக சிங்கப்பூர் செய்திகள் நம்பிக்கைக்குரியதாக இருப்பதால் தமிழ் முரசு செயலியை அதிகம் நாடுவேன்,” என்றார் சவூதி அரேபியாவில் பணியாற்றிவரும் சேர்ந்த 44 வயது திரு முத்தையா ஜெகதீசன்.

கடந்த பொதுத் தேர்தல் தொடர்பான செய்திகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறினார் சவூதியில் வசித்துவரும் திரு ஜெகதீசன்.
கடந்த பொதுத் தேர்தல் தொடர்பான செய்திகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறினார் சவூதியில் வசித்துவரும் திரு ஜெகதீசன். - படம்: ஜெகதீசன்

இவ்வாண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ் முரசு செயலியில் வெளியான செய்திகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாக இவர் குறிப்பிட்டார்.

“என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் விரல் நுனியில் தமிழ் முரசு கொண்டு வந்தது. நிறைய தகவல்கள் கிடைத்தன. விரிவான செய்திகளாகவும் இருந்தன,” என்றார் திரு ஜெகதீசன்.

சிங்கப்பூர்த் தமிழர்களுடனும் தமிழ்ச் சமூகத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க தமிழ் முரசு செயலியை நாடுவதாகச் சொன்னார் கனடாவில் வாழும் 45 வயது திரு ஆதிரேயன்.

“அரசியல் சார்ந்த செய்திகள், தைப்பூசம் போன்ற பண்டிகைகள் குறித்த செய்திகளை நான் பரவலாகப் பார்ப்பேன். தமிழ் முரசில் வரும் செய்திகள் சுருக்கமாகவும் அருமையாகவும் இருக்கும்,” என்றார் அவர்.

தமிழ் முரசில் தமக்குப் பிடித்தமானது எளிய நடையில் வரும் செய்திகள் என்றார் கனடாவின் டொரோன்டோ நகரில் வசித்து வரும் 29 வயது ஹேமந்த் முரளி.

தமிழ் முரசில் தமக்குப் பிடித்தமானது எளிய நடையில் வரும் செய்திகள் என்றார் டொரொன்டோவில் வசித்துவரும் திரு ஹேமந்த்.
தமிழ் முரசில் தமக்குப் பிடித்தமானது எளிய நடையில் வரும் செய்திகள் என்றார் டொரொன்டோவில் வசித்துவரும் திரு ஹேமந்த். - படம்: ஹேமந்த்

“வாரத்திற்கு ஒருமுறையாவது தமிழ் முரசு செயலியைப் பார்த்துவிடுவேன். அதில் நான் அதிகம் விரும்பிப் பார்ப்பது விலைவாசி தொடர்பான செய்தியைத்தான்,” என்றார் ஹேமந்த்.

குறிப்பாக, தங்க விலையின் ஏற்ற இறக்கங்கள் தமிழ் முரசில் துல்லியமாக இருக்கும் என்ற அவர், சிங்கப்பூருக்கு வந்தால் தங்க நகைகள் வாங்க தமிழ் முரசு செயலியை அதிகம் நாடுவதாகக் குறிப்பிட்டார்.

தமிழ் முரசில் வெளிவரும் செய்திகள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கின்றன என்றும் தமிழ்ச் சொல்வளத்தை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டார் சென்னைவாசியான திரு முகமது இம்தாதுல்லாஹ், 30.

தமிழ் முரசு செயலியில் சொல்வளத்தை அதிகரிக்கிறது என்றார் சென்னையில் வாழும் திரு முகமது இம்தாதுல்லாஹ்.
தமிழ் முரசு செயலியில் சொல்வளத்தை அதிகரிக்கிறது என்றார் சென்னையில் வாழும் திரு முகமது இம்தாதுல்லாஹ். - படம்: முகமது இம்தாதுல்லாஹ்

“தமிழ் முரசு செயலியில் வரும் செய்திகளின் எழுத்துநடை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்மொழி மீது எனக்கு ஆர்வம் அதிகம். பயன்பாட்டில் இல்லாத பல எளிய சொற்களைச் செயலியில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் சொன்னார்.

தமிழ் முரசு செயலிக்கு அப்பால் தமிழ் முரசு ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களும் வெளிநாட்டுத் தமிழர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

தமிழ் முரசின் இன்ஸ்டகிராமையும் டிக்டாக்கையும் பார்ப்பதாகச் சொன்னார் அமெரிக்காவில் உள்ள திரு ஹரி ராகுல்.
தமிழ் முரசின் இன்ஸ்டகிராமையும் டிக்டாக்கையும் பார்ப்பதாகச் சொன்னார் அமெரிக்காவில் உள்ள திரு ஹரி ராகுல். - படம்: ஹரி ராகுல்

“கோவில் குடமுழுக்கு நிகழ்வுகள், தைப்பூசத் திருநாள் போன்றவற்றை நேரடியாக ஒளிபரப்புவதைப் பார்த்திருக்கிறேன். அது நேரில் இருந்து பார்த்த அனுபவத்தைத் தருகிறது,” என்றார் அமெரிக்காவில் வசிக்கும் 30 வயது ஹரி ராகுல்.

இன்ஸ்டாகிராம், டிக்டாக் சமூக ஊடங்களிலும் தமிழ் முரசு தனது சுவடுகளைப் பதிக்கிறது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக் சமூக ஊடங்களிலும் தமிழ் முரசு தனது சுவடுகளைப் பதிக்கிறது. - படம்: தமிழ் முரசு
குறிப்புச் சொற்கள்