வாக்களிப்பு தினமான மே 3ஆம் தேதி தமிழ் முரசின் சிறப்பு நேரலை நிகழ்ச்சி தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகத் தளங்களான யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக் ஆகிய தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகும்.
மே 3ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடிக்கும் இந்த நிகழ்ச்சியில் மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உட்படப் பொதுத் தேர்தல் 2025 தொடர்பான பல்வேறு தகவல்கள் வழங்கப்படவிருக்கின்றன.
சிறப்பு விருந்தினர்கள் மூவர் கலந்துகொள்ளும் தேர்தல் குறித்த கலந்துரையாடலைத் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி வழிநடத்துவார்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மாதிரி வாக்கு எண்ணிக்கைகளின் விவரங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த முடிவுகளைப் பகிர்வதுடன் அதைப் பற்றிய கண்ணோட்டங்களும் கலந்துரையாடல்களில் இடம்பெறும்.
அத்துடன் இந்தப் பொதுத் தேர்தலுக்காகத் தமிழ் முரசு தயாரித்த காணொளிகள், வலையொளிகள் சில திரையிடப்படும்.
தேர்தல் குறித்த அனைத்து விவரம்: https://www.tamilmurasu.com.sg/general-election-2025