தெம்பனிஸ் விபத்து: உயிர் பிழைத்தவருக்கு மனநல சிகிச்சை

தெம்பனிஸ் விபத்து: உயிர் பிழைத்தவருக்கு மனநல சிகிச்சை

படம்: பே யாம் கெங்/ஃபேஸ்புக்

04 Nov 2026 - 12:38 pm

1 mins read

அக்டோபர் 29ஆம் தேதி மோட்டார்சைக்கிளோட்டியும் அவருடைய கர்ப்பிணி மனைவியும் உயிரிழக்கக் காரணமான தெம்பனிஸ் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான மீரா என்பவருக்குப் பெரிய அளவில் உடற்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், அவர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) ஃபேஸ்புக்கில் பதிவிட்ட திரு பே, விபத்தில் சிக்கிய மீராவைத் தாமும் அடித்தள அமைப்புத் தலைவர்களும் நேரில் சென்று சந்தித்ததாகக் கூறினார்.

விபத்தின்போது மீரா ஓட்டிச் சென்ற அவருடைய தந்தையின் கார் பலத்த சேதமடைந்ததால், அதனைப் பழைய இரும்புப் பொருளாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மீராவின் தந்தை ஜூரோங் தீவுக்கு வேலைக்குச் செல்ல அந்த வாகனம் தேவைப்படுவதால், இந்த இழப்பு அவரது வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சட்ட ஆலோசனை, காப்புறுதிக் கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக அவர்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். எங்களின் பரிந்துரைகள் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்,” என்று வடகிழக்கு மாவட்ட மேயருமான திரு பே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்விபத்துமனநலம்