தெம்பனிஸ்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

தெம்பனிஸ்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

1 mins read
உட்லண்ட்ஸ் நார்த் முதல் மரினா பே வரை இலவச பேருந்து சேவை
607669ea-880f-4505-8f9f-a3348c863ebe
பாதிக்கப்பட்டப் பயணிகளை மாற்று ரயில் பாதைகளைத் தேர்வு செய்யும்படியோ இலவசப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும்படியோ எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஞாயிற்றுக்கிழமை (மே 3) காலை தெம்பனிஸ்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தட எம்ஆர்டி (TEL) சேவையில் சமிக்ஞைக் கோளாற்றால் ஏற்பட்ட தடைக்குப் பின்னர் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவிதெரிவித்துள்ளது.

முன்னதாக உட்லண்ட்ஸ் நார்த் முதல் கேல்டிகாட் நிலையம் வரை, ஆர்ச்சட் முதல் பேஷோர் நிலையம் வரை என அந்த முழு வழித்தடத்தின் 27 ரயில் நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஆயினும் கேல்டிகாட், ஆர்ச்சர்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே இருவழிப் பாதைகளிலும் சேவைகள் மெதுவாக இயங்கும் என்று காலை 10.48 மணியளவில் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

ரயில் சேவைத் தடைக்கு சமிக்ஞைக் கோளாறு காரணம் என்று நிறுவனத்தின் தலைவர் லாம் ஷியூ காய் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

நகரை நோக்கிச் செல்லும் பயணிகள் வடக்கு-தெற்குப் பாதை, டௌன்டவுன் பாதை அல்லது வட்ட ரயில்பாதையைப் பயன்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிரயில்சேவைதடைநிலப் போக்குவரத்து ஆணையம்பேருந்துஇலவசம்பயணிகள்