மூத்த வழக்கறிஞர் டான் செங் ஹான் மீண்டும் சிங்கப்பூர் சட்டச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேனியல் கோ சூன் குவான், தினேஷ் சிங் டிலன் இருவரும் தொடர்ந்து துணைத் தலைவர்களாகப் பொறுப்பு வகிப்பர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வாக்களிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான ரெமி சூ செங் ஸி சங்கத்தின் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டச் சங்கம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அறிக்கை மூலம் இத்தகவல்களை வெளியிட்டது.
