தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதைகுழி எதிரொலி: பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட சாலை

1 mins read
bec7ad7d-3a77-441c-8d3e-fc4b9c691cea
2025 ஜூலை 27ஆம் தேதி தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில்  பழுதுபார்க்கும் பணியில் ஊழியர்கள்  - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மவுண்ட்பேட்டன் ரோடுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கும் இடையிலான தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தின் ஓர் பகுதி பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  ஜூலை 27 அன்று அதன் ஃபேஸ்புக் பதிவில் இதனைத் தெரிவித்த ஆணையம் இதனால் பேருந்து எண் 36, 48 ஆகியவை மாற்று பாதைக்குத் திருப்பிவிடப்படும் என்றும் கூறியது. மேலும் மரின் பரேட், ஆம்பர், மவுண்ட்பேட்டன், மற்றும் தஞ்சோங் காத்தோங் ரோடு பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும்படியும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த அறிவிப்பின் தொடர்பில்  வாகன ஓட்டுநர்களும் பயணிகளும்  தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்திய ஆணையம், இதனால் பயணிகள் தாமதங்களை சந்திக்க நேரிடலாம் என்றும் சொன்னது.

சாலை பராமரிப்பு பணிகள் எப்போது நிறைவடைந்து சாலைகள் திறக்கப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

தஞ்சோங் காத்தோங்  சாலையில் ‘ஒன் ஆம்பர்’ கூட்டுரிமை வீடுகளுக்கு அருகில் ஜூலை 5ஆம் தேதி புதைக்குழி உண்டானதை அடுத்து இந்தச் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அப்போது புதைகுழியில் கார் ஒன்று விழுந்ததால், அந்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்