தீவு விரைவுச்சாலையில் டாக்சி ஒன்று விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்ததை அடுத்து அதன் ஓட்டுநரும் அவரது பயணியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜனவரி 8ல் நடந்த அந்த விபத்து குறித்த தகவல் அந்நாள் காலை 7.15 மணிக்குச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குக் கிடைத்தது.
காருக்கும் டாக்சிக்கும் இடையிலான அந்த விபத்து, துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஜூரோங் டவுன் வெளிவாயிலுக்கு அருகில் நடந்தது.
70 வயது வாகன ஓட்டுநர் ஒருவரும் 31 வயது பயணி ஒருவரும் இங் டெங் ஃபோங் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்நேரத்தில் அந்த இரண்டு ஆடவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட 68 வயது ஓட்டுநர், விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

