சாலை விபத்தில் இருவர் காயம்

சாலை விபத்தில் இருவர் காயம்

1 mins read
4fa29c59-6b86-4821-ad1a-8bd8bb306965
‘டிரான்ஸ்கேப்’ டாக்சி ஆக வலது தடத்தில் காணப்படுகிறது. அதற்கு முன்னால் மற்ற இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. - படங்கள்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஒன்ரெட் ரோடு வெளிவழிக்கு அருகில், தீவு விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் இருவர் காயமுற்றனர்.

விபத்து ஜூன் 19ஆம் தேதி காலை 6.30 மணியளவில் நடந்தது.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது 27 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவின்றி இருந்தார்.

டாக்சியில் பயணியாக இருந்த 21 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்து நடந்த பிறகு எடுக்கப்பட்ட காணொளி, ‘சிங்கப்பூர் ரோடு ஆக்சிடன்ட்ஸ்.காம்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்தக் காணொளியில், ஆக வலது தடத்தில் இருக்கும் ‘டிரான்ஸ்கேப்’ டாக்சிக்கு இடப்பக்கத்தில் உள்ள தடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று காணப்படுகிறது.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
டான் டோக் செங்விபத்துகாணொளி