செந்தோசாவில் உள்ள மெடேம் டுஸ்ஸாட்ஸ் காட்சியகத்தில் அமெரிக்காவின் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் மெழுகுப் பொம்மை இடம்பிடித்துள்ளது.
இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 27ஆம் தேதிவரை அந்த மெழுகுப் பொம்மை காட்சிக்கு வைக்கப்படும்.
உலகளவில் உள்ள மெடேம் டுஸ்ஸாட்ஸ் காட்சியகங்களில் வைக்கப்படுவதற்காக 13 மெழுகுப் படைப்புகளால் டெய்லர் ஸ்விஃப்ட்டின் உருவம் வடிக்கப்பட்டது.
ஜூன் 26ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிவரை ஸ்விஃப்ட்டின் மெழுகு உருவத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முதல் 100 பேருக்கு இலவசப் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும்.
அவர்கள் புகைப்படத்தைச் சமூக ஊடகத்தில் #MadameTussaudsSG #MTSG என்ற குறிப்புகளுடன் பதிவிடவேண்டும்.

