தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறைச்சியை இறக்குமதி செய்த ஆசிரியருக்கு அபராதம்

1 mins read
38b289ec-ec96-4ca0-8f02-a57b46fb15f5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சியை இறக்குமதி செய்ததற்காக 12,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெய் ஹூவா என்ற அந்த பெண் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் இருந்து 175 கிலோகிராம் எடைக்கு அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவை இறக்குமதி செய்துள்ளார்.

அவர் விலங்குகளின் ரத்தத்தையும் இறக்குமதி செய்துள்ளார்.

விளையாட்டுப் பொருள்கள், துணிகள் என்று கூறி அந்த நபர் இறைச்சியை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

சிங்கப்பூரில் இறைச்சியை இறக்குமதி செய்ய தகுந்த உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

குற்றம் புரிந்த அந்த 48 வயது சீன நாட்டவருக்கு மே 7ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையின் போது அந்தப் பெண் இறக்குமதி செய்யப்பட்ட உணவு தன் சொந்த பயன்பாட்டுக்குத்தான் என்று கூறினார்.

சிங்கப்பூரில் ரத்தம் தொடர்பான உணவுப்பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சார்ந்த பொருள்களில் எளிதாக நுண்ணுயிர் கிருமிகள் வளரக்கூடும், அதே நேரம் புதிதாக நோய்களும் ஏற்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்